பிரபஞ்சத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

சிவபுராணம்

விளக்கம்

இயற்கை நறுமணம் உடைய தேவரே

ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்

வியத்தகு முக்கண் உடைய எம்பெரும

வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்

வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப

மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்

தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்

திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக

வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம்